Homeசெய்திகள்சட்டம்போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை குறைபாட்டால் உயிரிழப்பு – சங்கரின் உடன்பிறப்புகளுக்கு ரூ.25.50 லட்சம் இழப்பீடு...

போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை குறைபாட்டால் உயிரிழப்பு – சங்கரின் உடன்பிறப்புகளுக்கு ரூ.25.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

-

- Advertisement -

காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கருக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் அவர் உயிரிழந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், அவரது உடன்பிறப்புகளுக்கு ரூ.25.50 லட்சம் இழப்பீடு வழங்க மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை குறைபாட்டால் உயிரிழப்பு – சங்கரின் உடன்பிறப்புகளுக்கு ரூ.25.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சங்கர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தனது சகோதரரின் மரணத்துக்கு மருத்துவமனையின் சிகிச்சைக் குறைபாடே காரணம் எனக் கூறி, அவரது இரு சகோதரர்கள் மற்றும் இரு சகோதரிகள், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரி மாநில நுகர்வோர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் நீதிபதி ஆர். சுப்பையா, நோய்க்கு ஏற்ற மருந்துகளும் உரிய சிகிச்சையும் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளைப் பரிசீலித்தார்.

மருத்துவச் சேவையில் எந்தக் குறைபாடும் இல்லை என்ற மருத்துவமனையின் வாதத்தை ஏற்க முடியாது எனத் தெரிவித்த ஆணையத் தலைவர், சிகிச்சையில் ஏற்பட்ட தாமதத்துக்கு மருத்துவமனை உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

மருத்துவச் சேவையில் குறைபாடு இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி ஆர். சுப்பையா, உயிரிழந்த சங்கரின் உடன்பிறப்புகளுக்கு ரூ.25.50 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.

 

MUST READ