Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷைக் கைது செய்ய வேண்டும் – டி.ஒய்.எஃப்.ஐ மாநிலப் பொறுப்பாளர் சந்துரு...

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷைக் கைது செய்ய வேண்டும் – டி.ஒய்.எஃப்.ஐ மாநிலப் பொறுப்பாளர் சந்துரு வலியுறுத்தல்; இன்று 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாகவும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷைக் கைது செய்ய வேண்டும் என்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) மாநிலப் பொறுப்பாளர் சந்துரு வலியுறுத்தியுள்ளார்.கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷைக் கைது செய்ய வேண்டும் – டி.ஒய்.எஃப்.ஐ மாநிலப் பொறுப்பாளர் சந்துரு வலியுறுத்தல்; இன்று 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குற்றம்சாட்டிய அவர், தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பெண்கள் நிம்மதியாக வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று மாநிலம் முழுவதும் 7 மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக சந்துரு தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு அந்த மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் பாலியல் ரீதியிலான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்துப் பேசிய அவர், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். பதவி விலகுவது மட்டுமின்றி, அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

முதலமைச்சர் மௌனம் காப்பது ஏன்?

மாவட்ட ஆட்சியருக்கே இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், சாதாரணப் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவுக்குக் கேள்விக்குறியாக இருக்கும் என சந்துரு கேள்வி எழுப்பினார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது, தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குக் கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய், தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில் ஏன் மௌனம் காக்கிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேசிய முதலமைச்சர், தனது கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மீதான குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன் என்றும் சந்துரு விமர்சித்தார்.

மேலும், மாவட்ட ஆட்சியர் தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும் என்று அமைச்சர்கள் கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் குறிப்பிட்ட அவர், மாவட்ட ஆட்சியர் முறையான அணுகுமுறையுடன் புகார் கடிதத்தை அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரிக்கை

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதாகக் கூறிய சந்துரு, அவை அனைத்தையும் முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

குறிப்பாக, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாகச் சட்டப்படி விசாரணை நடத்தி அவரைக் கைது செய்ய வேண்டும் என்பதே தங்களது முக்கியக் கோரிக்கை என்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பாளர் சந்துரு தெரிவித்தார்.

“தமிழகத்தில் பாலியல் சம்பவங்கள் நடைபெறாத நாளே இல்லை” – தவெக அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!

MUST READ