Homeசெய்திகள்சினிமா'ஹனுமான் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

‘ஹனுமான் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

-

- Advertisement -

ஹனுமான் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.'ஹனுமான் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

கடந்த 2024-ஆம் ஆண்டு பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, வணிக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அபார வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக ‘ஜெய் ஹனுமான்’ என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், ‘ஹனுமான்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்போது ‘ஹனுமான் 2 – தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ என்ற பெயரில் வேறொரு படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பையும் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தில் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் வி.ஐ. ஆனந்த் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.'ஹனுமான் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!​’ஜெய் ஹனுமான்’ முற்றிலும் வேறுபட்ட கதையாக உருவாகும் நிலையில், ‘ஹனுமான் 2 – தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ படமும் முற்றிலும் மாறுபட்ட வேறொரு கதைக்களத்தில் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஹனுமானை மையமாக கொண்ட ஒரே தொடரின் பின்னணியில் இரண்டு வெவ்வேறு கதைகளாக இந்த இரண்டு படங்களும் உருவாவது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இனிவரும் நாட்களில் ஹனுமான் 2 படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் தொடர்பான அப்டேட்டுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

​

MUST READ