Homeசெய்திகள்இந்தியாமேற்கு வங்காளத்தில் இனி மாதந்தோறும் மின் கட்டண கணக்கீடு! ஜனவரி முதல் புதிய நடைமுறை அமல்!

மேற்கு வங்காளத்தில் இனி மாதந்தோறும் மின் கட்டண கணக்கீடு! ஜனவரி முதல் புதிய நடைமுறை அமல்!

-

- Advertisement -

மேற்கு வங்காள மாநிலத்தில் இனி 3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு வந்த மின்சாரப் பயன்பாடு, ஜனவரி மாதம் முதல் மாதந்தோறும் கணக்கிடப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி தலைமையில் நடைபெற்ற மந்திரிசபைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி செய்தியாளர்களிடம் விளக்கினார்.

3 மாத மின் கட்டண சுமைக்கு முற்றுப்புள்ளி!

மேற்கு வங்காள மாநில மின் பகிர்மான நிறுவனத்தின் மின்விநியோகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இதுவரை 3 மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரப் பயன்பாடு கணக்கிடப்பட்டு வந்தது.

இதனால் ஒரே நேரத்தில் 3 மாதங்களுக்கான மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இது பொதுமக்களுக்கு பெரும் நிதிச்சுமையாக இருப்பதாகக் கூறி, மாதந்தோறும் மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கிடும் முறையை அமல்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்று, வரும் ஜனவரி மாதம் முதல் மாதந்தோறும் மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கிடும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2,000!

இதற்கிடையே, வேலை கிடைக்காத பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் மேற்கு வங்காள அரசு அறிவித்துள்ளது.

மேலும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு திட்டங்களும் வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வர உள்ளதாக முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணக் கணக்கீட்டில் மாற்றம் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ஆகிய அறிவிப்புகள் மேற்கு வங்காள மக்களிடையே கவனம் பெற்றுள்ளன.

இனி ‘West Bengal’ இல்லை… ‘பஸ்சிம் பங்கா’ தான்! டிசம்பர் 9-ல் சட்டசபையில் தீர்மானம்!

MUST READ