சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் பிக்காசோ பட புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தமிழ் மொழியிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ‘ஜெயிலர் 1’, ‘ஜெயிலர் 2’, ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்போது ‘பிக்காசோ’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்தும் சிவராஜ்குமாருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்குகிறார். இதில் சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்த் தவிர யோகாலட்சுமி, சிவானி நாகரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை டிராமா கம்பெனி மற்றும் கிரீன் காட் பிக்சர் நிறுவனம் தயாரிக்க, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. எனவே அடுத்த அப்டேட் எப்போது வெளிவரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது இன்ப அதிர்ச்சி தரும் விதமாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் டிராப் (முதல் பாடல்) இன்று (நவம்பர் 25) மாலை 5:30 மணி அளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
