Homeசெய்திகள்சினிமாதென்னிந்திய மாநிலங்களில் வசூலை அள்ளும் தனுஷின் 'ஓ.ம்'.... 5 நாள் வசூல் அப்டேட்!

தென்னிந்திய மாநிலங்களில் வசூலை அள்ளும் தனுஷின் ‘ஓ.ம்’…. 5 நாள் வசூல் அப்டேட்!

-

- Advertisement -

தென்னிந்திய மாநிலங்களில் தனுஷின் ஓ.ம் வசூலை வாரிக் குவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தென்னிந்திய மாநிலங்களில் வசூலை அள்ளும் தனுஷின் 'ஓ.ம்'.... 5 நாள் வசூல் அப்டேட்!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் தனுஷ், தற்போது தனது 56-வது படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் ‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘ஓம்’ (OM) திரைப்படத்தில் நடித்திருந்தார். ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படமாக வெளியான இதில் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா மற்றும் பலர் நடித்திருந்தனர். கடந்த நவம்பர் 20-ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதாவது படத்தில் தனுஷ், சாய் பல்லவியின் நடிப்பும், சாய் அபயங்கரின் இசையும் படத்திற்குப் பலம் சேர்த்தாலும், திரைக்கதையில் விறுவிறுப்பு குறைவதால் ஒரு சிலர் இந்தப் படத்திற்குக் கலவையான விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இருப்பினும், இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம், படம் வெளியான முதல் மூன்று நாட்களில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், இப்படம் வெளியான ஐந்து நாட்களில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் வசூலை அள்ளும் தனுஷின் 'ஓ.ம்'.... 5 நாள் வசூல் அப்டேட்!அதன்படி மாநில வாரியான பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.31.8 கோடிக்கு மேல் வசூலித்து கணிசமான வரவேற்பை தக்கவைத்துக் கொண்டுள்ளதோடு, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.17.5 கோடிக்கு மேலும், கேரளாவில் ரூ.14 கோடிக்கு மேலும், கர்நாடகாவில் ரூ.7.5 கோடிக்கு மேலும் வசூல் செய்து மற்ற மாநிலங்களிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இனிவரும் நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ