Homeசெய்திகள்சினிமா​விக்ரம் பிரபு நடிக்கும் 'சிட்டி ஆஃப் கோல்ட்' படத்தின் மேக்கிங் வீடியோ வைரல்!

​விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிட்டி ஆஃப் கோல்ட்’ படத்தின் மேக்கிங் வீடியோ வைரல்!

-

- Advertisement -

விக்ரம் பிரபு நடிக்கும் சிட்டி ஆஃப் கோல்ட் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.​விக்ரம் பிரபு நடிக்கும் 'சிட்டி ஆஃப் கோல்ட்' படத்தின் மேக்கிங் வீடியோ வைரல்!

நடிகர் விக்ரம் பிரபு, கடைசியாக தனது 25-வது படமான ‘சிறை’ திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த 2025-ஆம் ஆண்டு இறுதியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் தான் ‘சிட்டி ஆஃப் கோல்ட்’. இது இவரது 26-வது படமாகும். ​ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ராகுல் தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் சித்தார்த் எழுதி, இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, கார்த்திக் சராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து ஸ்வாத்மிகா ராஜசேகர், அமலா சாஜி மற்றும் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தங்கக் கடத்தலை மையமாக வைத்து ஆக்ஷன் கிரைம் த்ரில்லர் ஜானரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

​ஏற்கனவே விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ‘சிட்டி ஆஃப் கோல்ட்’ படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த மேக்கிங் வீடியோவின் இறுதியில், படம் 2027-ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. இது தவிர இந்த படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ