விஜய் ஆண்டனியின் லைன் அப் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகதனது திரைப் பயணத்தைத் தொடங்கிய விஜய் ஆண்டனி, தற்போது அடுத்தடுத்த பல திரைப்படங்களில் நடிப்பதில் பிஸியாகி வருகிறார். அந்த வகையில், இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘அப்பா குட்டி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, தற்போது தெலுங்கிலும் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கிடையில், விஜய் ஆண்டனி ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். ஏற்கனவே ‘வள்ளி மயில்’, ‘லாயர்’ போன்ற படங்களைக் கைவசம் வைத்திருக்கும் இவர், இன்னும் சில படங்களில் நடித்துள்ளார். அந்த படங்கள் வெளியீட்டிற்குத் தயாராகி வருகின்றன. மேலும், பாண்டியன் ஆதிமூலம் இயக்கத்தில் தனது 30-வது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதனிடையே, ‘அயோத்தி’ பட இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்க உள்ள புதிய படம் மிகச்சிறப்பான உணர்வுப்பூர்வமான கதைக்களத்தைக் கொண்டதாகவும், திரையரங்குகளில் நிச்சயம் வெற்றி பெறும் படமாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய் ஆண்டனி காச நோயாளியாக நடிக்க உள்ளதாகவும், அதற்காக உடல் எடையைக் குறைக்க உள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம், ‘கோடியில் ஒருவன்’ பட இயக்குநர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் 3’ படத்தில் இணையத் தயாராகி வருகிறார்.
விஜய் ஆண்டனியின் திரைப்பயணத்திலேயே மிக அதிக பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை, 2027 அக்டோபர் மாதம் ஆயுத பூஜையையொட்டி திரையரங்குகளில் வெளியிடத் படக்குழு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அடுத்தடுத்துப் பல சுவாரசியமான படங்களைக் கைவசம் வைத்திருக்கும் விஜய் ஆண்டனியின் படங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
