Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு – தீர்ப்பை வரவேற்று இந்து...

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு – தீர்ப்பை வரவேற்று இந்து அமைப்பினர் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய தீபத்தூணில் நாளை கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளை மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு – தீர்ப்பை வரவேற்று இந்து அமைப்பினர் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்!

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்று, திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் இந்து அமைப்பினர் திரண்டு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த 20-ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 22-ஆம் தேதி முதல் திருப்பரங்குன்றம் பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மலை, கிரிவலப் பாதை, கோவில் வாசல், சிக்கந்தர் தர்கா, காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணிக்காக 5,618 போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, தீபம் ஏற்றுவதற்கான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், கடந்த 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று கோவில் மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது.

மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதையடுத்து, தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழக்கு தொடர்ந்த மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த ராம ரவிக்குமார், நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாதது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று காலை 11 மணியளவில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை வரவேற்று இந்து அமைப்பினர் கோவில் வாசலில் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.

இதனால், திருப்பரங்குன்றம் பகுதியில் நாளை நடைபெற உள்ள தீபம் ஏற்றும் நிகழ்வு தொடர்பாக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கிய உச்சநீதிமன்றம்

MUST READ