Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் வன்னி அரசு புலியைத் துரத்தியதாகக் கூறப்படும் விவகாரம்: நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை கோரிய வழக்கு...

அமைச்சர் வன்னி அரசு புலியைத் துரத்தியதாகக் கூறப்படும் விவகாரம்: நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி!

-

- Advertisement -

நீலகிரி மாவட்டத்தில் அமைச்சர் வன்னி அரசு புலியைத் துரத்தியதாகக் கூறப்படும் நிகழ்வு தொடர்பாக, நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.அமைச்சர் வன்னி அரசு புலியைத் துரத்தியதாகக் கூறப்படும் விவகாரம்: நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி!

வழக்கறிஞர் கந்தன் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கு, நீதிபதிகள் என். சதீஷ்குமார், ஜி.கே. முத்துக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பொதுவாக வழக்குத் தொடர முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், விளம்பரம் தேடும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டது தெரியவந்தால், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் வன்னி அரசு தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அமைச்சர் வன்னி அரசு மீது வழக்கறிஞர் கந்தன் வழக்கு – உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

MUST READ