HomeBreaking Newsஅமைச்சர் வன்னி அரசு மீது வழக்கறிஞர் கந்தன் வழக்கு – உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

அமைச்சர் வன்னி அரசு மீது வழக்கறிஞர் கந்தன் வழக்கு – உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

-

- Advertisement -

நீலகிரியில் புலியை அமைச்சர் வன்னி அரசு துரத்திய விவகாரம்: நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி வழக்கு!அமைச்சர் வன்னி அரசு மீது வழக்கறிஞர் கந்தன் வழக்கு – உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை – உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வில் விரைவில் விசாரணை

நீலகிரி மாவட்டத்தில் அமைச்சர் வன்னி அரசு புலியைத் துரத்தியதாகக் கூறப்படும் நிகழ்வு தொடர்பாக, நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் கந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் தலைமையிலான வனப் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் ஜீப் சவாரிக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், புலிகளுக்கு எந்தவிதமான தொந்தரவும் கொடுக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், வனத்துறைக்குப் பொறுப்பான அமைச்சராக இல்லாத நிலையில், அமைச்சர் வன்னி அரசு புலிகள் காப்பகத்துக்குள் சென்று வீடியோ வெளியிட்டுள்ளதாகவும், அவரது இந்தச் செயல் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாக இருக்கலாம் என்றும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனவே, அமைச்சரின் செயல்பாடு சட்டப்படி குற்றமாகுமா என்பதை ஆய்வு செய்து, நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், விசாரணையின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கறிஞர் கந்தன் தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவின் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தின் வனப் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு அமர்வில் விரைவில் நடைபெற உள்ளது.

 

MUST READ