பிக் பாஸ் பிரபலம் முத்துக்குமரன் தலைமறைவு? 5 நாட்களுக்கும் மேலாக பூட்டிக் கிடக்கும் வீடு – செல்போன் எண்ணை வைத்து தேடுதல் வேட்டையில் போலீசார்!
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாகப் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிக் பாஸ் பிரபலம் முத்துக்குமரன் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
அவரது வீடு கடந்த 5 நாட்களுக்கும் மேலாகப் பூட்டப்பட்டிருப்பதால், அவரைப் பிடிக்க காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முத்துக்குமரன் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாக வஹிதா என்ற பெண் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, முத்துக்குமரனின் வீடு கடந்த 5 நாட்களுக்கும் மேலாகப் பூட்டப்பட்டிருப்பதாகவும், அவரது செல்போன் எண்ணிலும் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து, செல்போன் எண்ணை அடிப்படையாகக் கொண்டு முத்துக்குமரின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அவரைப் பிடிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திருமண வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக முத்துக்குமரனிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
