Homeசெய்திகள்சினிமாமீண்டும் அட்வென்ச்சர் ஜானரில் களமிறங்கிய சிம்புதேவன்.... எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் 'நவோரியா'!

மீண்டும் அட்வென்ச்சர் ஜானரில் களமிறங்கிய சிம்புதேவன்…. எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் ‘நவோரியா’!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் வெறும் ரொமான்ஸ், மாஸ் ஆக்ஷன் மற்றும் மெகா பட்ஜெட் படங்களுக்கே ரசிகர்கள் பரீட்சயமாகியிருந்த காலத்தில், வித்தியாசமான ஜானர்களை ஆடியன்ஸுக்கு ஏற்ற பக்கா காமெடியுடன் கலந்து கொடுத்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் இயக்குநர் சிம்புதேவன்.மீண்டும் அட்வென்ச்சர் ஜானரில் களமிறங்கிய சிம்புதேவன்.... எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் 'நவோரியா'!​ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் பாணியில், பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமாவில் பல்வேறு புதுமையான ஜானர்களை இவர் பரிசோதித்துப் பார்த்து வெற்றியும் கண்டார். ஹிஸ்டாரிக்கல் ஜானரில் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, ஃபேன்டஸி ஜானரில் ‘அறை எண் 305-ல் கடவுள்’, வெஸ்டர்ன் ஜானரில் ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’, ரியலிசம் ஜானரில் ‘ஒரு கண்ணியும் மூணு களவாணிகளும்’, அட்வென்ச்சர் ஜானரில் ‘புலி’ மற்றும் சர்வைவல் ஜானரில் ‘போட்’ என பல புது ஜானர்களைத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் சிம்புதேவன்.மீண்டும் அட்வென்ச்சர் ஜானரில் களமிறங்கிய சிம்புதேவன்.... எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் 'நவோரியா'!​அந்த வரிசையில், ‘போட்’ திரைப்படத்திற்குப் பிறகு சிம்புதேவன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘நவோரியா’. இதுவும் ஒரு அட்வென்ச்சர் திரைப்படமாகவே உருவாகியுள்ளது. இப்படத்தில் விமல், ஆரி அர்ஜுனன், ஆன் ஷீத்தல், பாலசரவணன், தம்பி ராமையா, வடிவுக்கரசி, பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
​டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தை, டிபிசி ட்ரீம் ஹவுஸ் மற்றும் சிம்புதேவன் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தில் நடித்துள்ளவர்களின் கதாபாத்திர போஸ்டர்களையும் படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டு வந்தது.மீண்டும் அட்வென்ச்சர் ஜானரில் களமிறங்கிய சிம்புதேவன்.... எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் 'நவோரியா'!​இதற்கிடையில், இப்படம் வருகின்ற டிசம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அளவில் அதிகரித்துள்ளது. வழக்கம் போல சிம்புதேவன் பாணியில் நகைச்சுவை கலந்த ஒரு சுவாரசியமான கதைக்களத்தில் இப்படமும் உருவாகியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘நவோரியா’ மூலமாக சிம்புதேவன் என்ன மேஜிக் நிகழ்த்தப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

MUST READ