அருள் நிதியின் வேட்ட சாமி பட இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர் அருள்நிதி. அந்த வகையில், இவரது நடிப்பில் வெளியான ‘டிமான்டி காலனி’, ‘மௌன குரு’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘டைரி’, ‘டிமான்டி காலனி 2’ போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. தற்போது அருள்நிதி நடிப்பில் ‘டிமான்டி காலனி 3’ படம் உருவாகி வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில், ‘பம்பர்’ படத்தின் இயக்குநர் செல்வகுமார் இயக்கத்தில் ‘வேட்ட சாமி’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார் அருள்நிதி. இந்தப் படத்தில் அருள்நிதியுடன் இணைந்து அமீர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இவர்களுடன் ஆடுகளம் நரேன், மைனா நந்தினி, இந்துமதி மணிகண்டன், விஜி சந்திரசேகர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கிராமத்துப் பின்னணியில், ஆன்மீகத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து, படத்திலிருந்து டீசரும், அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன. அதே சமயம், இப்படம் 2026 டிசம்பர் மாதம் திரைக்கு வரும் எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ‘வீரரைப் போற்று’ எனும் இரண்டாவது பாடல் இன்று (நவம்பர் 29) மாலை 5 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
