நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் – சினிமா மேக்கப் கலைஞர்
சினிமா துறையில் மேக்கப் பெண் கலைஞராக பணிபுரிந்து வந்தவர் சத்யபிரியா. இவருக்கு வயது 40. இவர் கனடாவில் வசிக்கும் தன் மகளிடம் வீடியோ கால் மூலம் பேசி விட்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்துள்ளது.

இவர் சென்னை வடபழனியில் குமரன் காலனி 9 வது தெருவை சேர்ந்தவர். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வாழ்ந்து வந்தார். இவருடைய மகள் யோகிதா (வயது 22) கனடாவில் தங்கி வேலைபார்த்து வருகிறார்.
சத்யபிரியா குடிப்பழக்கத்துக்கு ஆளாகி நேற்று முன்தினமான ஞாயிற்றுகிழமை இரவு கனடாவில் உள்ள தன் மகளிடம் வீடியோ கால் மூலம் பேசினார். அப்போது சத்யபிரியா எனக்கு வாழ பிடிக்கவில்லை. “நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்” என்று மகள் யோகிதாவிடம் சொல்லிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த யோகிதா, சென்னையில் உள்ள தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது. கதவு உள்பக்கமாக பூட்டி இருந்துள்ளது. பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சத்யபிரியா தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வடபழனி போலீசார் தூக்கிலிட்டு தொங்கிய சத்யபிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


