Homeசெய்திகள்சென்னைதஷ்வந்த் விடுதலை தீர்ப்பை திருத்த கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழ்நாடு அரசு முடிவு

தஷ்வந்த் விடுதலை தீர்ப்பை திருத்த கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழ்நாடு அரசு முடிவு

-

- Advertisement -

ஏழு வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்தின் விடுதலை மற்றும் மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரியும், திருத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மறுஆய்வு மனுவை தாக்கல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தஷ்வந்த் விடுதலை தீர்ப்பை திருத்த கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழ்நாடு அரசு முடிவு

we-r-hiring

2017ஆம் ஆண்டு சென்னை போரூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைதான தஷ்வந்தை விடுவித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை திருத்தக் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தஷ்வந்திற்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. பின்னர், அந்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
மேல்முறையீட்டு விசாரணையின் போது, உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக தஷ்வந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், அத்தகைய எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முறையிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் வகையில் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை திருத்தக் கோரி தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், தஷ்வந்த் விடுதலை தொடர்பான தீர்ப்பை திருத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை புறநகரில் தொடரும் மாடு திருட்டு…அச்சத்தில் கால்நடை விவசாயிகள்…

MUST READ