இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் சல்மான் கான் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏஆர் முருகதாஸ் ரமணா, கஜினி, துப்பாக்கி ஏழாம் அறிவு, உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பல படங்களை இயக்கியிருக்கிறார். ஆனால் இவர் கடைசியாக இயக்கிய ஸ்பைடர், தர்பார் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

அதேசமயம் விஜய் நடிப்பிலும் சிவகார்த்திகேயன் நடிப்பிலும் புதிய படங்களை இயக்க இருந்தார். ஆனால் அது சம்பந்தமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே ஆமீர்கான் நடிப்பில் கஜினி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்திருந்தார். அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது ஏஆர் முருகதாஸ் மீண்டும் ஒரு பாலிவுட் நடிகருடன் இணைய இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.