spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசரக்கு லாரி மீது கார் மோதி 3 பேர் பலி

சரக்கு லாரி மீது கார் மோதி 3 பேர் பலி

-

- Advertisement -

சரக்கு லாரி மீது கார் மோதி 3 பேர் பலி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி பின்பக்கத்தில் வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.

accident

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே எழிலரசி மற்றும் அவரது சகோதரர் திருமால் மற்றும் டிரைவர் உட்பட மூன்று பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர. மேலும் ஒரு சிறுவன் இரண்டு சிறுமி ஆகியோர் சிறு காயங்களுடன் ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார் விசாரணை மேற்கண்டு வருகின்றனர்.

we-r-hiring

விசாரணையில் விபத்தில் சிக்கியவர் வேலூர் பகுதியைச் சேர்ந்த திருமால் ,மற்றும் அவரது சகோதரி எழிலரிசி என்றும் இவர்கள் சென்னையில் வசித்து வருவதாகவும் உறவினரின் திதிக்காக வேலூர் வந்து மீண்டும் சென்னை திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட வாலாஜாபேட்டை போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ