spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாடோலிவுட்டில் கோலாகல திருமணம்… பிரபல தெலுங்கு நடிகர் சர்வானந்க்கு டும் டும் டும்! .

டோலிவுட்டில் கோலாகல திருமணம்… பிரபல தெலுங்கு நடிகர் சர்வானந்க்கு டும் டும் டும்! .

-

- Advertisement -

நடிகர் சர்வானந்த் கடந்த 2004 ஆம் ஆண்டு ‘ஐதோ தரீக்கு’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். இவர் தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் பிரபலமானார். அந்தப் படத்திற்காக தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது பெற்றார்.

மேலும் இவர் காதல்னா சும்மா இல்ல, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, கணம் நாளை நமதே உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து பல படங்களில் இவர் பிஸியாக நடித்து வருகிறார்.

we-r-hiring

சர்வானந்த்துக்கும் அவரது காதலி ரக்ஷிதா ரெட்டிக்கும் சில நாட்களுக்கு முன்பாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதற்கிடையில் சமீபத்தில் ஹைதராபாத் அருகே ஃபிலிம்நகரில் இவர் காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை முதலுதவிக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பின் அடுத்த நாள் சர்வானந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “எனக்கு ஏற்பட்டது ஒரு சிறிய விபத்து தான். நான் நலமுடன் இருக்கிறேன்…” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டி இவர்களின் திருமணம் இன்று ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடைபெற்றது.

இவர்களின் திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

MUST READ