நடிகர் சாந்தனு நடிப்பில் கடந்த மே 12ஆம் தேதி வெளியான ‘இராவண கோட்டம்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘மதயானை கூட்டம்’ படத்தின் இயக்குனரான விக்ரமன் சுகுமாரன் இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் சாந்தனுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். பிரபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படம் ராமநாதபுரம் சுற்றுவட்டார மக்களின் வாழ்க்கை பற்றி பேசக்கூடிய படமாக அமைந்திருந்தது.

இரு சமூகத்தினர் இடையே குள்ள பிரச்சினைகளை கூறுவதோடு மட்டுமல்லாமல் உண்மை நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் இப்படம் ரசிகர்களிடைய கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.