spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஓட்டுநர் இல்லாமல் சாலையில் ஓடிய காரால் பரபரப்பு

ஓட்டுநர் இல்லாமல் சாலையில் ஓடிய காரால் பரபரப்பு

-

- Advertisement -

ஓட்டுநர் இல்லாமல் சாலையில் ஓடிய காரால் பரபரப்பு

கேரளா அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது கார் ஒன்று, ஓட்டுநர் இல்லாமல் சாலையில் தாறுமாறாக சென்று கொண்டிருந்தது.  இதைப் பார்த்த சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் உடனடியாக துரிதமாக செயல்பட்டு காரை நிறுத்தியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Kottakkal Car Moving Incident, നിർത്തിയിട്ട കാർ പിന്നോട്ടോടി; കാറിൽ  കുടുങ്ങി കുടുംബം; രക്ഷകനായത് ബൈക്കിലെത്തിയ യുവാവ് - bike passenger saves  family from moving car at kottakkal ...

மலப்புறம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென்று டிரைவர் இல்லாமலேயே பின்னோக்கி நகர்ந்து வாகன நெரிசல் மிகுந்த சாலையில் ஓடியது. இதனால் காருக்குள் இருந்தவர்கள் கூச்சலிட்டு அலறினார்கள். இதைபார்த்த அதே சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், கார் ஓட்டுநர் இல்லாமல் வாகன நெரிசல் மிகுந்த சாலையில் செல்வதைப் பார்த்து உடனடியாக தனது இருசக்கர வாகனத்தை சாலையில் நிறுத்தி காருக்குள் ஏறி பிரேக் போட்டு காரை நிறுத்தினார். இதனால் காருக்குள் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.

we-r-hiring

car

வாகன நெரிசல் மிகுந்த பரபரப்பான சாலையில், டிரைவர் இல்லாமல் ஓடிய காரை இருசக்கர வாகனத்தில் சென்றவர் உடனடியாக தடுத்து நிறுத்தியது பலரையும் பாராட்டை பெற்றது.

MUST READ