வீட்டு இணைப்புகளுக்கு மின்கட்டண உயர்வு இல்லை- மின்வாரியம்
வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 13 பைசா – 21 பைசா வரை மின் கட்டணம் உயர்த்தப்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மின் கட்டணம் உயர்த்தப்படும். கைத்தறி, விசைத்தறி போன்றவைகளுக்கு இலவச மின்சாரம் தொடரும். வேளாண் இணைப்பு, குடிசை இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை

அனைத்து இலவச மின்சாரம் சலுகைகளும் தொடரும். வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும். வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 2.18% உயர்வை தமிழக அரசு ஏற்கும். 2.18% உயர்வை மின் வாரியத்திற்கு தமிழக அரசு மானியமாக வழங்கும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.