எவ்வித சிக்கலும் இன்றி 300க்கும் மேற்பட்ட திரையரங்கில் திட்டமிட்டபடி வெளியாகிறது ‘கனெக்ட்’ என்றார் இயக்குனர் விக்னேஷ் சிவன். குழந்தையை நன்றாக பார்த்து கொள்கின்றார் ‘அம்மா நயன்தாரா’ குறித்தும் இயக்குனர் விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் பேசினார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் (கிருஷ்ணவேணி) திரையரங்கில் நடிகை நயன்தாரா நடித்து டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாக உள்ள “கனெக்ட்” திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. படத்தை பார்க்க படத்தின் நாயகி நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் வினய் உள்ளிட்ட படக்குழுவினர் திரை பிரபலங்களோடு பார்த்து ரசித்தனர்.

அப்போது செய்தியாளர்கள் சந்தித்துப் பேசிய படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் விக்னேஷ் சிவன், படம் அருமையாக வந்துள்ளது என்றும் இடைவெளி இல்லாமல் ஒரு புதுமுயற்சியை இதில் கையாண்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். படத்தில் உள்ள அமானுஷ்ய காட்சி அமைப்புகள் இயக்குனரின் கற்பனை என்றும் படம் அருமையாக வந்துள்ளது என்றார் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
படத்தில் நயன்தாரா அம்மாவாக நடித்துள்ளார் நிஜத்திலும் குழந்தைகளை நன்றாக பார்த்து கொள்கின்றாரா என்று செய்தியாளரின் கேள்விக்கு நன்றாக பார்த்து கொள்கின்றார் என்றார்.
படத்தில் இடைவேளை இல்லாததால் படம் வெளியாவதில் சிக்கல் உள்ளதாக செய்திகள் வருகிறதே என்ற கேள்விக்கு எந்த சிக்கலும் இல்லை என்றார் இயக்குனர். ரசிகர்கள் இடைவேளையில் வாங்க கூடியவையை அனைத்தையும் முன் கூட்டியே வாங்கி செல்ல அறிவுறுத்துவது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றும் மற்றபடி 300 க்கும் மேற்பட்ட திரையரங்கில் “கனெக்ட்” படம் வெளியாகிறது என்றார் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன்.