நடிகர் விஜய், இரண்டு முறை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ரசிகர்கள் கலந்து கொண்டு விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கடைசியாக நடந்த இரண்டு ஆலோசனைக் கூட்டத்திலும் சில அறிவுரைகள் வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நாளை காலை 10 மணிக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளை சென்னை பனையூர் அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் வாரிசு இசை வெளியீட்டு விழா மற்றும் படத்திற்கான ப்ரோமோஷன் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.


இசை வெளியீட்டு விழாவுக்கான அனுமதிச் சீட்டு (பாஸ்) நாளை பனையூரில் உள்ள அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளது. பாஸ் வாங்குவதற்காக நாளை அனைத்து மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சமீபத்தில் ரத்ததானம் வழங்குவதற்கு செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல கண் தானம் வழங்க, பெற்றுக்கொள்ள விஜய் மக்கள் இயக்கம் சார்பாக புதிய செயலி நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதில் நடிகர் விஜய் கலந்துகொள்வது உறுதியாகவில்லை