spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇரவில் பெண்கள் பாதுகாப்புக்கு காவல்துறை புதிய திட்டம்!

இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு காவல்துறை புதிய திட்டம்!

-

- Advertisement -

 

இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு காவல்துறை புதிய திட்டம்!
Photo: TN Police

சென்னையில் இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்புக்காக காவல் துறையை அழைக்கலாம் என்ற புதிய திட்டத்தை தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

we-r-hiring

நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசிய அமைச்சர்!

இது தொடர்பாக, தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பெண்கள் பாதுகாப்புக்கென புதிய திட்டம் ஒன்றை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள், காவல்துறையின் உதவி எண்கள் 1091, 112, 044- 23452365, 044- 28447701 ஆகிய தொலைபேசி எண்களை அழைக்கலாம்.

காவல் ரோந்து வாகனம் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும். அனைத்து நாள்களிலும் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவை இலவசமாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் கலவரம்- எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு கடிதம்!

சென்னையில் பெண்களின் பாதுகாப்புக்காக ‘காவல் செயலி’ திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ