
நடிகர் ரஜினிகாந்தை புதுச்சேரி மாநிலத்தின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நேரில் சந்தித்துப் பேசினார்.
வசந்தபாலன்- அர்ஜுன் தாஸ் கூட்டணியின் புதிய திரில்லர்… ரிலீஸ் தேதி அப்டேட்!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், உருவாகி வரும் ‘லால் சலாம்’ படப்பிடிப்பு புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதற்காக, நடிகர் ரஜினிகாந்த் புதுச்சேரி மாநிலத்தில் முகாமிட்டுள்ளார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை அமைச்சர் சந்திர பிரியங்கா நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, நடிகர் ரஜினிகாந்துடன் சிறிது நேரம் அமைச்சர் உரையாடினார்.
பின்னர், அமைச்சர் சந்திர பிரியங்கா, நடிகர் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, புதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம், நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசியிருந்தார். இந்த நிகழ்வின் போது, அவரது மகள் ஜனனி உடனிருந்தார்.
சந்திப்புக் குறித்து அமைச்சர் சந்திர பிரியங்கா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஆன்மீகமும், அன்பும் கலந்த வசீகரப் புன்னகையுடன் அருகில் செல்வோருக்கு ஆத்மார்த்தமாய் நேர்மறை சக்தி உணர்வை ஊட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடனான சந்திப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.
கேஜிஎப் இயக்குனர் பிரபாஸ் கூட்டணியின் சலார்… மிகவும் எதிர்பார்க்கப்படும் டீசர் ரிலீஸ் அப்டேட்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.