spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅடுத்த தலைமைச் செயலாளர் யார்?- விரிவாகப் பார்ப்போம்!

அடுத்த தலைமைச் செயலாளர் யார்?- விரிவாகப் பார்ப்போம்!

-

- Advertisement -

 

"செந்தில் பாலாஜி துறையில்லா அமைச்சராகத் தொடர்வார்"- தமிழக அரசின் இணையதளத்தில் தகவல் வெளியீடு!
Photo: TN Govt

தமிழக அரசின் அடுத்த தலைமைச் செயலாளரைத் தேர்வு செய்வது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தார். ஓரிரு நாட்களில் புதிய தலைமைச் செயலாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

மணிப்பூர் நிலவரம்- ஜூன்- 24ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

தற்போதைய தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., விரைவில் ஓய்வுப் பெற உள்ள நிலையில், அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசின் பரிந்துரையை அளிக்க உள்துறைச் செயலாளர் அமுதா இ.ஆ.ப., தலைமையிலான குழு டெல்லி சென்றுள்ளது. இந்த நிலையில், புதிய தலைமைச் செயலாளர் தேர்வு குறித்து இறுதிக் கட்ட ஆலோசனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய தலைமைச் செயலாளருக்கானத் தேர்வு பட்டியலில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத் தலைவராக உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகத்துறைச் செயலாளர் சிவதாஸ் மீனா இ.ஆ.ப., வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் இ.ஆ.ப. ஆகியோரை இருப்பதாச் சொல்லப்படுகிறது. இவர்களில் சிவதாஸ் மீனா இ.ஆ.ப., புதிய தலைமைச் செயலாளராகத் தேர்வு செய்ய அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

“50 நாட்களாக மணிப்பூர் பற்றி எரிகிறது; ஆனால் பிரதமர் மோடி….”- ராகுல் காந்தி கண்டனம்!

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2021- ஆம் ஆண்டு மே மாதம் தலைமைச் செயலாளராக முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் 60 வயதை நிறைவுச் செய்வதால், வரும் வெள்ளிக்கிழமை ஓய்வுப் பெறுகிறார். ஓய்வுக்கு பிறகு தமிழக அரசின் ஆலோசகராக முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

MUST READ