
வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், தாயையும், மகளையும் வெட்டிக் கொலைச் செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“50 நாட்களாக மணிப்பூர் பற்றி எரிகிறது; ஆனால் பிரதமர் மோடி….”- ராகுல் காந்தி கண்டனம்!
திண்டுக்கல் மாவட்டம், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கள்ளிப்பட்டி அம்பேத்கர் காலனியில் அய்யனார், வள்ளியம்மாள் தம்பதி தங்களது மகள் ராசாத்தி மற்றும் மருமகன் லட்சுமணன் ஆகியோருடன் ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த வியாழன்கிழமை இரவு அன்று அனைவரும் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் வள்ளியம்மாளையும், ராசாத்தியையும் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர்.
அதைத் தடுக்கச் சென்ற லட்சுமணன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பின்னர், அடையாளம் தெரியாத நபர்கள் தப்பிச் சென்ற நிலையில், வள்ளியம்மாளும், ராசாத்தியும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இந்த இரட்டை கொலை எதற்காக நடந்தது என்பது குறித்த விவரம், இதுவரை தெரியவில்லை.
“பயங்கரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் தீவிர முயற்சி”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
இது குறித்த தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.