spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"உலக அளவில் இந்தியா விரைவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக முன்னேறும்"- பிரதமர் நரேந்திர மோடி...

“உலக அளவில் இந்தியா விரைவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக முன்னேறும்”- பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை!

-

- Advertisement -

 

அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வாஷிங்டன் டிசியில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேரில் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்கள் தலைமையில் உயர்மட்டக் கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இருதரப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம், பொருளாதாரம், புதிய தொழில்நுட்பங்கள், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

we-r-hiring

பாட்னாவில் குவிந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள்!

இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில், இந்திய நிறுவனங்கள், அமெரிக்க நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. பின்னர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கூட்டாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

"உலக அளவில் இந்தியா விரைவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக முன்னேறும்"- பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை!
Photo: PM Narendra Modi

அதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நாடாளுமன்றக் கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “மும்பை, இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்து பல ஆண்டுகளாகியும், தீவிரவாதம் இரு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. 140 கோடி இந்திய மக்களின் சார்பாக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசுவது கவுரவமாக உள்ளது. மனிதக் குல எதிரியான தீவிரவாதத்தை ஆதரிக்கும், ஏற்றுமதிச் செய்யும் அனைத்து சக்திகளையும் முறியடிக்க வேண்டும்.

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வர நம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். உலக அளவில் இந்தியா விரைவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக முன்னேறும்” எனத் தெரிவித்துள்ளார்.

“பயங்கரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் தீவிர முயற்சி”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

பிரதமர் நரேந்திர மோடி பேசிய போது, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கைத்தட்டினர். இந்த நிகழ்வின் போது, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் நாடாளுமன்றத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ