spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகோவையைத் தொடர்ந்து தனியார் பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர்!

கோவையைத் தொடர்ந்து தனியார் பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர்!

-

- Advertisement -

 

கோவையைத் தொடர்ந்து தனியார் பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர்!
Photo: Tamil Selvi

கோவையைத் தொடர்ந்து, சேலத்திலும் தனியார் பேருந்து ஓட்டுநராகக் களமிறங்கியுள்ள பெண்ணிற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

we-r-hiring

“24 மணி நேரமும் வேலைப் பார்க்கும் இல்லத்தரசிகள்”- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தாரமங்கலத்தைச் சேர்ந்த 28 வயதான தமிழ்ச்செல்வி, சிறுவயது முதலே கனரக வாகனங்களை இயக்கி அனுபவம் பெற்றவர். கருத்து வேறுபாடு காரணமாக, கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். தனியார் பெண்கள் கல்லூரியில் பேருந்து ஓட்டி வந்த தமிழ்ச்செல்வி, தற்போது மேட்டூரில் இருந்து ஈரோடு மாவட்டம், அம்மாப்பேட்டை வழித்தடத்தில் செல்லும் தனியார் பேருந்தை இயக்கி வருகிறார்.

மேட்டூரில் முதன்முறையாக, தனியார் நகரப் பேருந்தை இயக்கும் முதல் பெண்ணான தமிழ்ச்செல்வி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவருக்கு பொதுமக்கள், சக பேருந்து ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

தண்டவாளத்தில் கற்கள்…ரயிலைக் கவிழ்க்க சதியா?- காவல்துறையினர் விசாரணை!

தமிழ்ச்செல்வியின் தந்தை மணி (வயது 60) லாரி ஓட்டுநர் என்பதும், அவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ