spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசர்ச்சைகளை டன் கணக்கில் குவித்த தி கேரளா ஸ்டோரி… வாங்க மறுக்கும் ஓடிடி நிறுவனங்கள்!

சர்ச்சைகளை டன் கணக்கில் குவித்த தி கேரளா ஸ்டோரி… வாங்க மறுக்கும் ஓடிடி நிறுவனங்கள்!

-

- Advertisement -

இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி‘ எனும் திரைப்படம் கடந்த மே 5ஆம் தேதி வெளியானது.
இந்த படத்தில் அடா ஷர்மா, யோஹிதா பிஹானி, சோனியா பலானி, சித்தி இத்னானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சன் சைன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. வீரேஷ் ஶ்ரீ வல்ஸா இதற்கு இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில், 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.இது போன்ற கதையினால் இந்த படத்தின் டீசர் வெளியானதிலிருந்தே இப்படம் சர்ச்சைக்குள்ளானது.

we-r-hiring

இதனால் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட நாடுகளில் இந்தப் படத்திற்கு பல்வேறு விதமான எதிர்ப்புகள் கிளம்பியது.அதன்பின் பல போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் தாண்டி ரூ.240 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வாங்குவதற்கு எந்த ஓ டி டி நிறுவனங்களும் முன் வரவில்லை என்று 2 நாட்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

இது குறித்து தி கேரளா ஸ்டோரி படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென், “எங்களை தண்டிக்க ஒட்டுமொத்த திரையுலகமும் திரண்டுள்ளது தெரிகிறது” என்று  புலம்பியுள்ளார்.

MUST READ