
டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

லியோ பட பாடல் விவகாரம் – நடிகர் விஜய்க்கு நோட்டீஸ்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, “தமிழக அரசியல் சூழல் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் ஆலோசனை நடத்தினேன். தமிழகத்தில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 72% வெற்றி பெற்றுள்ளோம். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சிதான். காங்கிரஸ் மாநில தலைவராக எனக்கு உரிய பணியை செய்ததில் மகிழ்ச்சி. தலைவர் பதவி மாற்றம் தொடர்பான தகவல் அறிந்து டெல்லி வரவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
பவண் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் ரீமேக் ஆகும் வினோதய சித்தம்… வெளியான மாஸ் போஸ்டர்!
2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி, கட்சி ரீதியாக பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை.