
தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநராக சங்கர் ஜிவால் இ.கா.ப., நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல்துறையின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன் 30) மதியம் 02.00 மணிக்கு அவர் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, பணிக்கான கோப்புகளை சங்கர் ஜிவாலிடம், முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு இ.கா.ப. ஒப்படைத்தார். அத்துடன், புதிய டி.ஜி.பி.க்கு பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு பாராட்டு கடிதத்தை வழங்கிய வாழ்த்திய முதலமைச்சர்!
கடந்த 1990- ஆம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரியான சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். உளவுப்பிரிவு டி.ஐ.ஜி., ஐ.ஜி., சிறப்பு அதிரடிப்படை ஏ.டி.ஜி.பி. உள்ளிட்டப் பொறுப்புகளை வகித்துள்ளார். மெச்சத்தகுந்தப் பணிக்காக சங்கர் ஜிவால் இருமுறை குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றுள்ளார்.
ஆளுநரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்- திருமாவளவன்
தமிழகத்தின் 32வது சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி.யாகப் பதவியேற்றுள்ள சங்கர் ஜிவால் இ.கா.ப., முன்னதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
