அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா 2‘ படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த டிசம்பர் 13ஆம் தேதி இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியானது.
இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ‘புஷ்பா தி ரைஸ்’ என்ற தலைப்பில் வெளியான இந்த படம் பான் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.
விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதன் வெற்றிக்கு பிறகு சுகுமாரன் இயக்கத்தில்புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சியான ‘புஷ்பா தி ரூல்‘ படத்திலும் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்த பகத் பாஸில் வில்லனாக நடிக்கிறார்.மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
கடந்த மே மாதம் பகத் பாசில் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.இதற்கிடையில் புஷ்பா 2 படத்தின்ஃபர்ஸ்ட் லுக் மற்றும்
டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் கூடுதல் தகவலாக, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும் ரன்வீர் சிங், புஷ்பா தி ரூல் படத்தில் சேமியா ரோலில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.