spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாலிஸ்ட் போய்க்கிட்டே இருக்கே.......விஜயின் லியோ படத்தில் இணையும் தனுஷ்!

லிஸ்ட் போய்க்கிட்டே இருக்கே…….விஜயின் லியோ படத்தில் இணையும் தனுஷ்!

-

- Advertisement -

மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வந்து கொண்டே இருக்கின்றன. இப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
மேலும் இந்த படத்தில் திரிஷா, சஞ்சய்தத், கௌதம் மேனன், மிஸ்கின் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது.

ஆனாலும் லியோ படத்தில் நடிப்பவர்கள் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பாக மடோனா செபாஸ்டியன், வையாபுரி, கைதி பழக்கத்தில் நடித்த நரேன், அர்ஜுன் தாஸ், விக்ரம் படத்தில் நடித்த பகத் பாசில் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்று பல செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

we-r-hiring

ஆனாலும் அந்த லிஸ்ட் முடிவடையாமல் நீண்டு கொண்டே போகிறது.
அந்த வகையில் சமீபத்தில் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்த பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இவரின் காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்படுகிறது என்றும் லியோ படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் லியோ படத்தில், நடிகர் தனுஷ் கௌரவ தோற்றத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது சம்பந்தமாக தனுஷிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இனிவரும் நாட்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ