விஜயின் லியோ படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் படம் உருவாகி வருகிறது. ஒரு மாஸ் கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் வீடியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய், லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.அதனால் இந்த படம் குறித்த அப்டேட்டுகள் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கின்றன.
அந்த வகையில் இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஜனனி, கைதி படத்தில் நடித்திருந்த நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான், விக்ரம் படத்தில் நடித்திருந்த பகத் பாஸில், வசந்தி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்று சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதுமட்டுமல்லாமல் நகைச்சுவை நடிகர் வையாபுரியும் மலையாள நடிகை மடோனா செபாஸ்டியனும் லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில்பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் லியோ படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்று செய்திகள் பரவியுள்ளன.
இவர் தமிழில் 2018 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அனுராக் காஷ்யப், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படத்தை பார்த்துவிட்டு, தான் அந்த யுனிவர்சில் இல்லாதது குற்ற உணர்வாக இருக்கிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். மேலும் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் சாகும் காட்சியிலாவது நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.