
கோவை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த விஜயகுமார் இ.கா.ப., நேற்று (ஜூலை 07) காலை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். இந்த நிகழ்வு தமிழக காவல்துறை தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது!
இந்த நிலையில், டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை குறித்து காவல்துறை உயரதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், டி.ஐ.ஜி. விஜயகுமாருடன் உடனிருந்த பாதுகாப்புக் காவலர் ரவிச்சந்திரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “தற்கொலைக்கு முன்தினம் குடும்பத்துடன் வெளியே போய்விட்டு இரவு 09.00 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ள டி.ஐ.ஜி. விஜயகுமார். சரியான தூக்கம் வரவில்லை என டி.ஐ.ஜி. விஜயகுமார் மாத்திரை எடுத்துக் கொள்வார் என்று காவலர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் சம்பவ தினத்தன்று காலை 06.30 மணிக்கு DSR அறைக்கு வந்துள்ளார். முகாம் அலுவலகத்தில் உள்ள DSR அறையில் DSR பார்த்தார் டி.ஐ.ஜி. விஜயகுமார்.
காலை 06.40 மணிக்கு DSR அறையில் காவலர் ரவிவர்மாவிடம் கேட்டு பால் வாங்கிக் குடித்தார். என் அறையில் இருந்த 183 என்ற 9 MM துப்பாக்கியை எடுத்துப் பயன்படுத்தும் முறைப் பற்றிக் கேட்டறிந்தார். நான் டி-சர்ட் போட்டு வெளியே வருவதற்குள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அறைக்கு வெளியே துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்தேன். மல்லாந்த நிலையில் தலையில் ரத்தக் காயத்துடன் டி.ஐ.ஜி. விஜயகுமார் கீழே விழுந்துக் கிடந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர்”. இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.