நெல்சன் திலீப் குமார், தனுஷ் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நெல்சன் திலிப் குமார் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதை தொடர்ந்து நெல்சன், தனுஷ் நடிப்பில் புதிய படத்தை இயக்க இருக்கிறார்.

ஒரு பக்கம் தனுஷும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை முடித்துவிட்டு தனது 50 வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார்.
இந்நிலையில் நெல்சன் திலீப் குமார் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் படம் புதிய படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க போவதாகவும் கூறப்படுகிறது.
ஜெயிலர் படத்தின் ரிலீஸுக்கு பிறகு இதன் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கப்படும் எனவும் அடுத்த ஆண்டு இதன் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கமல்ஹாசன், ஏற்கனவே சிவகார்த்திகேயனின் SK 21 மற்றும் சிம்புவின் STR 48 படங்களை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.