spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

-

- Advertisement -

 

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
Photo: TN Govt

தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

we-r-hiring

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பப் படிவம் வெளியீடு- விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் குறித்த விரிவான தகவல்!

அதன்படி, சிறப்புத் திட்ட அமலாக்கத்துறைச் செயலாளராக தாரேஸ் அகமது ஐ.ஏ.எஸ்., நில சீர்திருத்தத்துறை ஆணையராக வெங்கடாசலம் ஐ.ஏ.எஸ்., பொதுத்துறை மற்றும் மறுவாழ்வுத்துறைக் கூடுதல் செயலாளராக சிவஞானம் ஐ.ஏ.எஸ்., வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக கலையரசி ஐ.ஏ.எஸ்., நீர்வளத்துறைக் கூடுதல் செயலாளராக மலர்விழி ஐ.ஏ.எஸ்., மதுவிலக்குத்துறை மற்றும் உள்துறை சிறப்புச் செயலாளராக சுகந்தி ஐ.ஏ.எஸ்., ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராக சந்திரகலா ஐ.ஏ.எஸ்., சமூக நலத்துறை ஆணையராக அமுதவல்லி ஐ.ஏ.எஸ்., தொழில்முனைவோர் வளர்ச்சி இயக்குநராக உமா சங்கர் ஐ.ஏ.எஸ். ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் மீனவர்கள் கைது- அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் செயலாளராக மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ்., ஊரக வளர்ச்சித்துறைச் சிறப்புச் செயலாளராக ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ்., பொதுத்துறைத் துணைச் செயலாளராக பத்மஜா, நகராட்சி நிர்வாக துணை இயக்குநராக சிம்ரஞ்சீத் சிங் கஹ்லோன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

MUST READ