Homeசெய்திகள்தமிழ்நாடு"இனி ரீல்ஸ் எடுத்தால் அவ்ளோதான்!" – அரசு மருத்துவமனைகளில் வீடியோ எடுக்கத் தடை…சுகாதாரத்துறை அதிரடி!

“இனி ரீல்ஸ் எடுத்தால் அவ்ளோதான்!” – அரசு மருத்துவமனைகளில் வீடியோ எடுக்கத் தடை…சுகாதாரத்துறை அதிரடி!

-

- Advertisement -

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் தனியுரிமைக்குக் பங்கம் விளைவிக்கும் வகையிலும், மருத்துவச் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் ரீல்ஸ் (Reels) மற்றும் வீடியோக்கள் எடுப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது."இனி ரீல்ஸ் எடுத்தால் அவ்ளோதான்!" – அரசு மருத்துவமனைகளில் வீடியோ எடுக்கத் தடை…சுகாதாரத்துறை அதிரடி!​சமீபகாலமாக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

​சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முக்கிய கட்டுப்பாடுகள்:
அரசு மருத்துவமனை வளாகங்கள் மற்றும் வார்டுகளுக்குள் பொதுமக்களோ அல்லது பிறரோ ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் எடுக்க முற்றிலுமாகத் தடை விதிக்கப்படுகிறது.
மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைகள், மருத்துவர்களின் பணிகள் போன்றவற்றை அவர்களின் அனுமதியின்றி ரீல்ஸ் வீடியோவாகப் பதிவு செய்வது சட்டப்படி குற்றமாகும்.

we-r-hiring

மருத்துவமனை வளாகத்திற்குள் இதுவரை அனுமதியின்றி எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள வீடியோக்களை உடனடியாக நீக்க (Delete) வேண்டும். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் தனியுரிமையைப் (Privacy) பாதிக்கும் வகையில் வீடியோ எடுத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பிரிவுகளின் கீழ் மிகக் கடுமையான நடவடிக்கைகள் பாயும்.

​சமீப நாட்களாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சிலர், பணி நேரத்தில் சினிமாப் பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்ட சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதேபோல, மருத்துவமனைக்கு வரும் சில யூடியூபர்கள் மற்றும் நெட்டிசன்கள், வார்டுகளுக்குள் நுழைந்து நோயாளிகள் சிகிச்சை பெறுவதை அவர்களின் அனுமதியின்றி வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் தங்களின் ‘வியூஸ்’களுக்காகப் பதிவிட்டு வந்தனர்.

​இத்தகையச் செயல்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு, மருத்துவர்களின் கவன சிதறலுக்கும் வழிவகுப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ​இந்த விதிமுறைகளை மீறி இனிமேல் யாராவது அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுத்தால், அவர்கள் மீது மருத்துவமனை நிர்வாகம் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு, சட்டப்படியான குற்றவியல் நடவடிக்கை (Criminal Action) மேற்கொள்ளப்படும் எனச் சுகாதாரத்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ​சுகாதாரத்துறையின் இந்த அதிரடி உத்தரவு, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை எளிய மக்களின் பாதுகாப்பையும், தனியுரிமையையும் உறுதி செய்யும் நோக்கில் வரவேற்கத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இஸ்லாம் மதம் மாறியவர்களுக்கான இடஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கோரி தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்!

MUST READ