
தயாளு அம்மாளின் 90-வது பிறந்தநாளையொட்டி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதிமாறன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்டோர் இன்று (ஜூலை 09) காலை 11.00 மணிக்கு வருகை தந்தனர். அதைத் தொடர்ந்து, தயாளு அம்மாளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி, அவரிடம் ஆசிப் பெற்றனர். குறிப்பாக, மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி ஆகியோர் ஒரே நேரத்தில் இல்லத்திற்கு வருகை தந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும் சந்தித்துப் பேசினர். இருவரும் எப்போது சண்டையிட்டனர்? இப்போது சமாதானம் ஆவதற்கு” எனத் தெரிவித்தார்.
ஆளுநர் மீது புகார்- குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!
மு.க.அழகிரி மீண்டும் தி.மு.க.வில் இணைவாரா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “தெரியவில்லை” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.