spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

- Advertisement -

 

"பட்டாசுக் கிடங்கு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 3 லட்சம் நிவாரணம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Photo: CM MKStalin

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜூலை 09) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற திராவிட இயக்க எழுத்தாளர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் சிலருக்கு எரிச்சலையும், பொறாமையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய நாட்டிற்கு இன்று ஆபத்து வந்துள்ளது; நாட்டினைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

we-r-hiring

“மின்மாற்றிக் கொள்முதலில் முறைகேடுகள் இல்லை”- தமிழக அரசு விளக்கம்!

பா.ஜ.க. அறிவித்த எதாவது ஒரு வாக்குறுதிகளை நிறைவேற்றியதா? பா.ஜ.க. அரசு ரூபாய் 15 லட்சம் கொடுப்பதாகத் தெரிவித்தார்கள்; ரூபாய் 15 கூட மக்களுக்கு கொடுக்கவில்லை. இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்ற வாக்குறுதியை பா.ஜ.க. நிறைவேற்றியதா? யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. நமது தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் நாம் கவலைப்பட வேண்டாம்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

திராவிட இயக்கம் ஒரு கொள்கை குடும்பம்; தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ