
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.
22,300 மாற்றுத்திறன் மாணவர்கள் பயன்பெறும் வகையில், கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுமென தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், தமிழக அரசு அரசாணையை வெளியீட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக, மொத்தம் 14 கோடியே 90 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.
புதிய தொழில்நுட்ப மாற்றங்களுடன் விண்ணில் பாயத் தயாரான சந்திரயான்- 3 விண்கலம்!
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர உதவித்தொகை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை 3,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாய் ஆகவும், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 4,000 ரூபாயில் இருந்து 8,000 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.