spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅதிரடியாக வெளியான தீபிகா படுகோனின் ப்ராஜெக்ட் கே ஃபர்ஸ்ட் லுக்!

அதிரடியாக வெளியான தீபிகா படுகோனின் ப்ராஜெக்ட் கே ஃபர்ஸ்ட் லுக்!

-

- Advertisement -

பிரபாஸ் நடிப்பில் ப்ராஜெக்ட் கே திரைப்படம் உருவாகி வருகிறது.இந்திய திரை உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் பான் இந்திய அளவில் உருவாகி வரும் படங்களில் ப்ராஜெக்ட் கே திரைப்படம் முக்கியமான ஒன்றாகும். இப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக கமல்ஹாசன் நடிக்கிறார் . இவர்களுடன் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதாணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வை ஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்குகிறார். மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி வரும் இந்த படம் டைம் டிராவல் சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இதற்கிடையில் ப்ராஜெக்ட் கே திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை வருகின்ற ஜூலை 20ஆம் தேதி அமெரிக்காவில் பிரம்மாண்டமாக நடைபெறும் San Diego Comic-con என்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன், பிரபாஸ், மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் இணைந்து வெளியிட இருக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன், நாகஸ்வின் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ப்ராஜெக்ட் கே படத்தின் தீபிகா படுகோனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த போஸ்டர், தீபிகா படுகோன் ஒரு பெரிய ஆக்சன் காட்சிகளுக்கு தயாராகுவது போல அமைந்துள்ளது. இது ஹாலிவுட் ரேஞ்சில் இருக்கிறது என்று பலரும் தன் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இனிவரும் நாட்களில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ