spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமின்சார ரயிலில் மாணவர்கள் மோதல்- அவசர கால அபாய சங்கிலியை பிடித்து இழுத்த 5 பேர்...

மின்சார ரயிலில் மாணவர்கள் மோதல்- அவசர கால அபாய சங்கிலியை பிடித்து இழுத்த 5 பேர் கைது

-

- Advertisement -

மின்சார ரயிலில் மாணவர்கள் மோதல்- அவசர கால அபாய சங்கிலியை பிடித்து இழுத்த 5 பேர் கைது

சென்னை மின்சார ரயிலில் நேற்று மாலை சேப்பாக்கம் – கடற்கரை ரயில் நிலையங்கள் இடையே கல்லூரி மாணவர்கள் மோதல் ஏற்பட்டது.

மின்சார ரயில்

நேற்று மாலை, வேளச்சேரியில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களில் ஏறிய மாநில கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கு இடையே சேப்பாக்கம் ரயில் நிலையம் முதல், கடற்கரை ரயில் நிலையம் வரை ஒருவரை ஒருவர் அராஜகத்தில் ஈடுபட்டதுடன், ரயிலின் அவசர கால அபாய செயினை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளனர்.

we-r-hiring

இதனால் அரை மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டு, அதன்பிறகு புறப்பட்டு சென்றதால் தாமதமானது. இதுகுறித்து விசாரணை நடத்திய எழும்பூர் ரயில்வே போலீசார், மாநிலக் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது 147 சட்டவிரோதமாக கூடுதல், 148 ஆயுதங்களுடன் கூடுதல், 294 பி ஆபாசமாக பேசுதல், 324 ஆயுதங்களால் காயம் விளைவித்தல், 341 சட்டவிரோதமாக தடுத்தல், 336 மற்றொரு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், 506(2) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

MUST READ