Homeசெய்திகள்தமிழ்நாடுஅபராதம் அதிகரிப்பால் போக்குவரத்து விதிமீறல் குறைந்தது

அபராதம் அதிகரிப்பால் போக்குவரத்து விதிமீறல் குறைந்தது

-

- Advertisement -

அதிக அபராதம் விதிப்பால் சென்னையில் போக்குவரத்து விதிமீறல் கணிகசமாக குறைந்திருப்பதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

traffic police

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் திருத்தி அமைக்கப்பட்ட போக்குவரத்து சட்டத்தின்படி, உயர்த்தப்பட்ட புதிய அபராதத் தொகை வசூலிக்கும் முறை கடந்த அக்டோபர் 26-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமன்றி, அவர்களுடன் பயணிக்கும் நண்பர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகை பன் மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இந்நிலையில் சென்னையில் அதிக அபராத தொகை அமலான பின் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் 60 சதவீதம் குறைந்துள்ளதாஅக ட்காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேகம் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையும் 2,400 இல் இருந்து 713 ஆக குறைந்துள்ளது என்றும், அபராத தொகை 10 மடங்குவரை உயர்வு, விழிப்புணர்வு காரணமாக விதிமீறல்கள் குறைந்துள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக சென்னையில் கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி நேற்று இரவு நடைபெற்ற சிறப்பு வாகனத்தை தணிக்கையில் 281 வழக்குகளும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 140 வழக்குகளும், ட்ரிபிள்ஸ் சென்றதாக 68 பேர் மீதும் வழக்கு பதிவும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வானம் ஓட்டியதாக 33 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

MUST READ