Homeசெய்திகள்தமிழ்நாடு​"வன்னியர்களை ஏமாற்றி வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி": ஜெ.குரு மகள் விருதாம்பிகை கடும் தாக்கு!

​”வன்னியர்களை ஏமாற்றி வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி”: ஜெ.குரு மகள் விருதாம்பிகை கடும் தாக்கு!

-

- Advertisement -

10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவின் மகள் விருதாம்பிகை கடுமையாகச் சாடியுள்ளார்.​"வன்னியர்களை ஏமாற்றி வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி": ஜெ.குரு மகள் விருதாம்பிகை கடும் தாக்கு!

 ​”முடிந்து போன கதை” – இபிஎஸ் கருத்துக்கு எதிர்ப்பு
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்த கேள்விக்கு அது “முடிந்து போன கதை” எனப் பதிலளித்திருந்தார். இது வன்னியர் சமூகத்தினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

​இது குறித்து விருதாம்பிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “2021 சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, அவசர அவசரமாக 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அறிவித்து வன்னிய மக்களை எடப்பாடி பழனிசாமி ஏமாற்றினார்.இடஒதுக்கீட்டைப் காட்டி வன்னியர் வாக்குகளைப் பெற்று சில தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. ஆனால், இப்போது தேர்தல் முடிந்துவிட்டதால் அதை “முடிந்து போன கதை” என்று கூறி வன்னியர் சமூகத்தின் முதுகில் குத்தியுள்ளார்.எடப்பாடி பழனிசாமி இப்படிப் பேசும்போதும், சமூக நீதி பற்றிப் பேசும் அன்புமணி ராமதாஸ் அமைதியாக இருப்பது ஏன்? தனது பதவியையும், அரசியல் லாபத்தையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அன்புமணி செயல்படுகிறார்.

வன்னியர் சமூகத்தின் நீண்ட காலக் கோரிக்கையான இந்த இடஒதுக்கீடு விவகாரத்தைச் சாதாரணமாகக் கடந்து செல்வதை ஏற்க முடியாது என விருதாம்பிகை தெரிவித்துள்ளார். “எனது தந்தை ஜெ.குரு வன்னியர் மக்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடினார். ஆனால், இன்றுள்ள தலைவர்கள் அந்த மக்களின் உணர்வுகளை வைத்து அரசியல் வியாபாரம் செய்கிறார்கள்” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியின் இறுதியில் கொண்டு வரப்பட்ட 10.5% உள் இடஒதுக்கீடு சட்டம், போதிய தரவுகள் இல்லை எனக் கூறி உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் முறையான தரவுகளுடன் அதனைச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இபிஎஸ்-ஸின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், வன்னியர் வாக்கு வங்கி தொடர்பான இந்தப் போர் அதிமுக-பாமக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாமக முன்னாள் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமார் காங்கிரஸில் இணைந்தார்!

MUST READ