Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரை எய்ம்ஸ் பணியாளர் நியமனத்தில் இடஒதுக்கீடு புறக்கணிப்பு: மக்களவையில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடும் குற்றச்சாட்டு

மதுரை எய்ம்ஸ் பணியாளர் நியமனத்தில் இடஒதுக்கீடு புறக்கணிப்பு: மக்களவையில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடும் குற்றச்சாட்டு

-

- Advertisement -

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியாளர் நியமனத்தில் மத்திய அரசு இடஒதுக்கீடு கொள்கைகளை முறையாகப் பின்பற்றாமல் புறக்கணிப்பதாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மக்களவையில் குற்றம் சாட்டியுள்ளார்.மதுரை,எய்ம்ஸ்,பணியாளர்,நியமனம், இடஒதுக்கீடு, மாணிக்கம்,தாகூர்,குற்றச்சாட்டு

​இன்று மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது இந்தப் பிரச்சனையை எழுப்பிய அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை குறித்துப் பல்வேறு புள்ளிவிவரங்களை முன்வைத்தார்.

we-r-hiring

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட 1011 ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் (Non-Teaching Posts), இதுவரை 972 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன.மருத்துவக் கல்லூரிக்கான ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 70% இடங்கள் இன்னும் காலியாகவே இருக்கின்றன.

நடைபெற்று வரும் குறைந்தபட்ச நியமனங்களிலும் இடஒதுக்கீடு விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும், சமூக நீதி குழிதோண்டிப் புதைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

​”தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கையான மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளே ஆமை வேகத்தில் நடந்து வரும் சூழலில், அங்குள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதிலும், இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதிலும் மத்திய அரசு மெத்தனம் காட்டுவது கண்டிக்கத்தக்கது” என மாணிக்கம் தாகூர் தனது உரையில் குறிப்பிட்டார். ​இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் மாஸ்க்கா? ‘சிக்காடா’ – உலக நாடுகளை அச்சுறுத்தும் புதிய COVID உருமாற்றம்!

MUST READ