spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"நான் பயப்படுவது இரண்டே பேருக்கு தான்"- நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!

“நான் பயப்படுவது இரண்டே பேருக்கு தான்”- நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!

-

- Advertisement -

 

"நான் பயப்படுவது இரண்டே பேருக்கு தான்"- நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!

we-r-hiring

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், “சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு எப்போதும் தொல்லை தான். சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்று சொன்னால் ரஜினி பயந்துவிட்டார் எனக் கூறினார்கள். நான் பயப்படுவது இரண்டே பேருக்கு தான்; ஒன்று கடவும்; மற்றொன்று நல்ல மனிதர்கள்.

தாயைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த வாய் பேச முடியாத மகன்!

காகம் ஒரு இடத்தில் இருக்காது; அங்கும் இங்கும் பருந்து பறந்துக் கொண்டிருக்கும், ஆனால் பருந்து அமைதியானது. காகம் உயரப் பறந்துச் சென்று பருந்தைக் கொத்தினாலும் பருந்து காகத்தை ஒன்றும் செய்யாது. காகம் பருந்து உயரத்திற்கு பறக்க ஆசைப்படும்; ஆனால் முடியாது; கீழே விழுந்து விடும். ரஜினி யாரை காகம் எனக் கூறினார் என சமூக வலைத்தளத்தில் எழுதுவார்கள்.

மது அருந்துவதால், மூளை சரியாக வேலை செய்யாது; சரியான முடிவு எடுக்க முடியாது; குடும்பமும் பாதிக்கும். நான் மது அருந்தியதால் நிறைய இழந்திருக்கிறேன்; அனுபவத்தில் சொல்கிறேன் மது அருந்தாதீர்கள்” என்று தனது ரசிகர்களை அறிவுறுத்தினார்.

காவல் நிலையத்தில் சிக்கன் சமைத்துச் சாப்பிட்ட காவலர்கள்!

ரஜினி கூறிய காகம், பருந்து கதை சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ