spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபுளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளான அரசு பேருந்து- 30 பேர் படுகாயம்

புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளான அரசு பேருந்து- 30 பேர் படுகாயம்

-

- Advertisement -

புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளான அரசு பேருந்து- 30 பேர் படுகாயம்

திருவண்ணாமலை அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புளிய மரத்தில் மோதி அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். 

Image
திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் பேருந்து நிலையம் அருகே திருவண்ணாமலை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சேலத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக காஞ்சிபுரம் நோக்கி சென்ற அரசு பேருந்து சாலையில் இருந்த சென்டர் மீடியினில் மோதி சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்திலும் மோதி சாலையில் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Image
இதில் பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 12 நபர்களுக்கு மட்டுமே அதிக அளவில் காயமடைந்து மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய போலீசார், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதிகாலையில் நடைபெற்ற இந்த சாலை விபத்து தூக்க கலக்கத்திலா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

MUST READ